கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இடிதாக்கி ஒருவர் பலி.

கோபி அருகே இடி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.

News image
Updated On :21 மே 2013, 5:21 pm

குமார்

கோபி அருகே இடி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.

கோபி ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணியன் (45). இவர் விவசாயி.

திங்கள்கிழமை இரவு  தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னலுடன் இடி தாக்கியதில் இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து வரப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேன் கவிழ்ந்து இளைஞர் உயிரிழந்தார்.

கோபி அருகே கொளப்பலூர் அம்மன் கோவில்பதி கிராமத்தை சேர்ந்தவர் பூபதி (17). இவர் திருப்பூர் பனியன் கம்பேனியில் வேலை பார்த்து வந்தார். திங்கள்கிழமை இரவு திருப்பூரில் வேலை முடிந்து வேனில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

கோபி-குன்னத்தூர் சாலையில் வேன் வந்து கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த பூபதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் பூபதியை சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பூபதி உயிரிழந்தார்.

இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.