கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கவுந்தப்பாடியில் தீ விபத்து: 3 கடைகள் எரிந்து சாம்பல்

கவுந்தப்பாடி-ஈரோடு ரோட்டில் செந்தில் என்பவருக்கு சொந்தமான ஆட்டோ, வேன் பெயின்டிங் பட்டறை உள்ளது. இந்த பெயின்டிங் பட்டறையில் உள்ள ஆம்னி வேனில் திங்கள்கிழமை திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

News image
Updated On :21 மே 2013, 5:06 pm

குமார்

கவுந்தப்பாடி-ஈரோடு ரோட்டில் செந்தில் என்பவருக்கு சொந்தமான ஆட்டோ, வேன் பெயின்டிங் பட்டறை உள்ளது. இந்த பெயின்டிங் பட்டறையில் உள்ள ஆம்னி வேனில் திங்கள்கிழமை திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

இதையடுத்து தொழிலாளர்கள் வெளியே ஓடி தப்பினர். அடுத்த சில நிமிடங்களில் தீ மளமளவென பரவி அருகில் உள்ள ஓட்டல், கறிக்கோழி கடை ஆகியவை பற்றி எரிந்தன.

உடனே கவுந்தப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர்.

2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முற்றிலும் அணைக்கப்பட்டன. இருப்பினும் இந்த தீ விபத்தில் பெயிண்டிங் பட்டறை, அதில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 வேன் கள், ஒரு சரக்கு ஆட்டா, ஒரு லாரி, ஓட்டல், கறிக்கோழி கடை  எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பெயிண்டிங் பட்டறையில் நின்ற ஆம்னிவேன் கியாசில்   ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.