மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திருத்துறைப்பூண்டி அருகே நடந் தஇரு வேறு சாலை விபத்துகளில் இரண்டு இளைஞர்கள் சாவு

திருத்துறைப்பூண்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இருவேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் இருசக்கரவாகனங்களில் சென்ற இருவர் பலியாயினர். ஒருவர் படுகாயத்துடன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிóச்சை பெற்று வருகிறார்.

News image
Updated On :26 மே 2013, 5:32 pm

ரவி

திருத்துறைப்பூண்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இருவேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் இருசக்கரவாகனங்களில் சென்ற இருவர் பலியாயினர். ஒருவர் படுகாயத்துடன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிóச்சை பெற்று வருகிறார்.

 திருவாரூர் மாவட்டம் கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (25).இவர் நாகைமாவட்டம்  வேளாங்கண்ணியில் தனியார் விடுதி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிழக்கு கடற்கரைசாலை வழியாக திருத்துறைப்பூண்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, திருத்துறைப்பூண்டி நகருக்குள் செல்வதற்கு பதிலாக , கன்னியாக்குமரி செல்லும் புறவழிóச்சாலையில் பாதை தெரியாமல் தவறுதலாக சென்றுள்ளார்.  அப்போது எடையூர் காவல்சரகம் பாண்டிசத்திரம் என்ற இடத்தில் வேகத்தடையிóல் வாகனம் ஏறியபோது நிலைதடுமாறி கீழே விழுóந்ததில் தலையில் பலத்த காயம்அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

எடையூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர

 மற்றொரு விபத்த

 எடையூர் காவல்சரகம் அம்மளூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் கண்ணண்(எ) கோபாலகிருஷ்ணன்(40),இவரும் அதபகுதியைச் சேர்ந்த இரது நண்பர் கணேசனும் இருசக்கரவாகனத்தில் கிழக்குகடற்கரைசாலையில் திருத்துறைப்பூண்டி நோக்கி இருசக்கரவாகனத்தில் சென்றபோது பாண்டி ரயில்வேகேட் அருகே நிலைதடுமாறி சாலையோரம் இருந்த ரயில்வே எச்சரிக்கை பலகையில் மோதியதில் கோபாலகிருஷ்ணன் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார்.

 கணேசன் பலத்த காயத்துடன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லலூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்

 இரு விபத்து குறித்தும் எடையூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.