டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நாட்றம்பள்ளி அருகே நின்று கொண்டிருந்த மினி லாரி மீது லாரி மோதல்: 3 பேர் சாவு

நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த மினி லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் மூன்று உடல் நசுங்கி பலி. மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர்.

News image
Updated On :26 மே 2013, 12:56 pm

ராஜேஷ்

நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த மினிலாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் மூன்று உடல் நசுங்கி பலி. மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர்.

வேலூர் கொசப்பேட்டை பகுதியை சேர்ந்த கோபி(64) என்பவர் நிகழ்ச்சிகளில் சமையல் எடுத்து வேலை செய்து வருபவர்.

இவர் சனிக்கிழமை காலை ஓசூரில் நடத்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு விருந்து தயாரிக்கவும், சாப்பாடு பரிமாறவும் வேலூர் கொசப்பேட்டை, சலவன்பேட்டையை சேர்ந்த சமையல் தொழிலாளர்கள் 37 பேரையும் மினிலாரி மூலம் அழைந்து சென்றார். நிகழ்ச்சி முடிந்து சனிக்கிழமை நள்ளிரவு வேலூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். ஞாயிற்றுகிழமை அதிகாலை 2 மணி அளவில் மினிலாரியை நாட்டறம்பள்ளி அடுத்த கேதாண்டப்பட்டி துணை மின்நிலையம் அருகில் தேசியநெடுஞ்சாலை ஓரத்தில் லாரி ஓட்டுனர் நிறுத்தினார். அவர்களில் சிலர் சிறுநீர் கழிக்க சென்றனர்.

அப்போது ஈரோட்டிலிருந்து ராணிப்பேட்டைக்கு தோல் பொருட்களை ஏற்றி வந்துக் கொண்டிருந்த லாரி ஒன்று நின்றிருந்த மினிலாரி மீது பயரங்கமாக மோதியது. இவ்விபத்தில் கொசப்பேட்டையை சேர்ந்த சின்னபொண்ணு(28), அண்ணாமலை(45) மற்றும் சலவன்பேட்டையை சேரந்த ஹரிகரன்(54) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர் மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர் விபத்தை அறிந்த அக்கம்பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவனையில் சேரத்தனர். படுகாயமடைந்தவர்களில் 8 பேர் மேல்சிகிச்சைகாக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்னர். மற்ற 11 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளர் பழனி மற்றும் போலீசார் மூவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாணியம்பாடி அரசு மருத்துவனையில் சேர்ந்தனர். மேலும் விபத்துக்குறித்து வழக்கு பதிந்து தோல் லாரி ஓட்டுனர் கோபிநாதன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.