அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: சாலைமறியலில் ஈடுபட்ட திமுகவினர் 150 பேர் கைது

சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலை, கூட்டுறவு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதிமுக சார்பில் கானூர் பாலசுந்தரம் தலைமையில் 17 பேர் கட்சி நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன்

News image
Updated On :28 மே 2013, 1:35 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல் தொடர்பாக சாலைமறியலில் ஈடுபட்ட திமுக 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலை, கூட்டுறவு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதிமுக சார்பில் கானூர் பாலசுந்தரம் தலைமையில் 17 பேர் கட்சி நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன் பின்னர் திமுகவினர் தெய்வசிகாமணி தலைமையில் 17 பேர், கட்சி நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பின்னர் வேட்புமனு பரிசீலனை செய்யும் பணி நடைபெற்றதால் அதிமுகவினர் ஒரு பிரிவினராகவும், திமுகவினர் ஒரு பிரிவினராகவும் நின்று கொண்டிருந்தனர். இருதரப்பினரிடையே மோதல் ஏற்படாமல் இருக்க கடலூர் மாவட்ட ஏடிஎஸ்பி ராஜன் தலைமையில் சுமார் 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பின்னர் அதிமுகவினர் வளாகத்தை விட்டு வெளியேறினர். இதனையடுத்து திமுகவினரை போலீஸார் வளாகத்தை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தினர். இதனையடுத்து திமுகவினர் போலீஸாரை கண்டித்து சேத்தியாத்தோப்பு குறுக்குரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட திமுகவினர் 150 பேரை போலீஸார் கைது செய்தனர். மறியலினால் மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.