அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் பிரசாதக்கடைகள் ரூ.37 லட்சத்திற்கு ஏலம் போனது!

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் கிழக்கு நுழைவு வாயில், மேற்கு நுழைவுவாயில் ஆகிய இரு பிரசாதக்கடைகள் நடத்துவதற்கான ஏலம் கோயில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவிஆணையர் சி.ஜோதி,

News image
Updated On :30 மே 2013, 11:54 am

G.Sundararaj

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் பிரசாதக்கடைகள் இந்த ஆண்டு ரூ.37 லட்சத்திற்கு ஏலம் போனது. இது கடந்த ஆண்டை விட ரூ.14 லட்சம் கூடுதலாக ஏலம் போய் உள்ளது.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் கிழக்கு நுழைவு வாயில், மேற்கு நுழைவுவாயில் ஆகிய இரு பிரசாதக்கடைகள் நடத்துவதற்கான ஏலம் கோயில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவிஆணையர் சி.ஜோதி, நிர்வாக அதிகாரி க.கிருஷ்ணகுமார், வட்ட ஆய்வாளர் ரே.தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. அலுவலக கணக்கர் வாசு, வெங்கடேசன், உதவியாளர் ஜே.முத்துக்குமரன் ஆகியோர் ஏலத்தை நடத்தினர்.

ஏலத்தில் மொத்தம் 6 பேர் பங்கேற்றனர். ஆனால் யாரும் ஏலம் கேட்கவில்லை. டெண்டர் மட்டும் பெட்டியில் போட்டனர். டெண்டர் பெட்டியை திறந்ததில் அதிகபட்சமான தொகையான 36 லட்சத்து 99 ஆயிரத்து, 999 ரூபாய் ஏலம் கேட்டிருந்த நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா முத்தூரைச் சேர்ந்த ஏ.அன்பரசனுக்கு கடைகள் நடத்த ஏலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் புவனகிரியைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவர் பிரசாதக்கடைகளை ரூ 23 லட்சத்து 33 ஆயிரத்து 331-க்கு எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.