வீராணம்ஏரி வறண்டு போனதால் வீராணம்ஏரியினை பொதுமக்கள் நடந்தே சென்று கடந்து ஏரியின் மேற்கு கரையில் உள்ள சித்தமல்லி, அகரபுத்தூர், ப.புத்தூர், கருணாகரநல்லூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்கின்றனர். தமிழக முதல்வர் வீராணம்ஏரியை தூர் வாருவதற்கு முதல் கட்டமாக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஆனால் இதுநாள் வரையில் ஏரி தூர்வாரும் பணி தொடங்கப்படவில்லை. எனவே ஏரியில் நீரின்றி வறண்டு போய் உள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் ஏரியை தூர் வார வேண்டும் என்றும், ஏரியிலிருந்து விவசாயிகள் வண்டல் மண்ணை தங்களது வயல்களுக்கு எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.