காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி செவிலியர்கள் தர்னா
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி செவிலியர்கள் வெள்ளிக்கிழமை கிருஷ்ணகிரியில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி செவிலியர்கள் வெள்ளிக்கிழமை கிருஷ்ணகிரியில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற தர்னாவிற்கு மாநிலத் துணைத் தலைவர் கே.ரத்தினம் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் கே.ஜெயா மற்றும் மாவட்ட பொருளாளர் விக்டோரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலத் தலைவர் எம்.சகுந்தலா, மாநில செயலர் பி.சவுந்திரம், மாநில பொருளாளர் மலர்விழிசந்திரலேகா, மாநில துணைத் தலைவர் செல்வநாயகி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இதில், பொது சுகாதார கணக்கெடுப்புப் பணியில் அனைத்து பணியாளர்களையும் ஈடுபடுத்த வேண்டும், கிராமப்புற நிரந்தர பயணப்படி உயர்த்தி வழங்கிட வேண்டும். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணயிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...