மழையால் வாழைகள் சேதம்: திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், சுத்தமல்லி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, தென்காசி, சங்கரன்கோவில், வள்ளியூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் பேட்டை, பத்தமடை, கல்லூர், முக்கூடல் பகுதியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன. நீர்மட்டம் உயருகிறது: பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 3359.12 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 4.65 அடி உயர்ந்து 82.00 அடியாக இருந்தது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 8.36 அடி உயர்ந்து 95.54 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து கணிசமாக இருந்ததால் நீர்மட்டம் 100 அடியை நெருங்கும் நிலையில் இருப்பதாக அணை வட்டாரங்கள் தெரிவித்தன.