வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வலியுறுத்தி நெல்லையில் ஆர்ப்பாட்டம்

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :6 நவம்பர் 2013, 11:10 am

ஷேக் அப்துல்காதர்

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தீர்மானத்தை மதித்து இந்தியா இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும். இலங்கைக்கு இந்தியா போர்கப்பல் வழங்கக்கூடாது. இலங்கை உடனான நட்பை இந்தியா துண்டிக்க வேண்டும் என  வலியுறுத்தி பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலர் இரா. அச்சுதன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டச் செயலர் ஐ. செந்தில்முருகன், தெற்கு மாவட்டச் செயலர் எல். வின்சிலி, மாநகர் மாவட்டச் செயலர் ஏ. துவரம்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர் கல்பாக்கம் மோகன், மாநில துணைப் பொதுச்செயலர் ஜெ. ஆசைதம்பி, மாநில பொருளாளர் புழல்தர்மராஜ், தலைமை நிலைய செயலர் ரா. சிவகுமார், மாநில மகளிரணி செயலர் டாக்டர்சகிலா, மாவட்டத் தலைவர் மு. அழகிரி, அம்பாசமுத்திரம் ஒன்றிய செயலர் கே. மனோகரன், சேரை ஒன்றிய செயலர் பி.கே. ராமர், கீழப்பாவூர் ஒன்றிய செயலர் ஏ. குமரசேகன், மகளிரணி நிர்வாகிகள் நாச்சியார், பொம்மி, சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.