நெல்லையில் ஞானவாணி நேயர்கள் சந்திப்பு
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக கல்வி வானொலியான ஞானவாணி பண்பலையின் 5 வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி நேயர்கள் சந்திப்பு, வானொலிக் கண்காட்சி


திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக கல்வி வானொலியான ஞானவாணி பண்பலையின் 5 வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி நேயர்கள் சந்திப்பு, வானொலிக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலியின் முதல் கல்வி வானொலியான ஞானவாணி 105.6 பண்பலை, சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் கடந்த 2009 ம் ஆண்டு தொடங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வானொலி தனது நிகழ்ச்சிகளை தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும் ஒலிப்பரப்புகிறது.
கல்வி, தன்னம்பிக்கை, தொழில்முனைவோர் என சமூகத்திற்கு பயனுள்ள நிகழ்ச்சியினை ஒளிபரப்பி வரும் ஞானவாணி 105.6 பண்பலையின் 5 வது ஆண்டு தொடக்க விழா பல்கலை கழக செனட் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி நடைபெற்ற நேயர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தொடர்பியல்துறை தலைவர் பெ. கோவிந்தராஜூ தலைமை வகித்தார். பல்கலைக் கழக துணைவேந்தர் ஏ.கே. குமரகுரு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் நேயர்கள் மணி, நம்பிராஜன், ஜெயக்குமார், ஹமீதுஅலி, சுப்புலட்சுமி, பாலு, ஜாபர், பரமசிவானந்தன், பரமசிவன், ஈஸ்வரமூர்த்தி, செல்வபெருமாள், பாஸ்கரன் உள்ளிட்டோருக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இதையடுத்து நடைபெற்ற வானொலி கண்காட்சியி்ல் 50 க்கும் மேற்பட்ட பழமையான வால்வ் வானொலிகள் இடம்பெற்றன. அறிவான்மொழி ஸ்டனிஸ் கலெக்சன்ஸ் நிறுவனர் ஜா. ராஜாஸ்டனிஸ் கலந்து கொண்டு, வானொலி கண்காட்சி நடத்தினார்.
சிறப்பு அம்சமாக உலகெங்கும் வரவுள்ள டி.ஆர்.எம். எனும் டிஜிட்டல் வானொலி பெட்டியினை குறைந்த செலவில் செய்வது குறித்து வல்லுநர் வ. ராம்சங்கர் செயல்விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான நேயர்கள் கலந்து கொண்டனர். ஞானவாணி பண்பலை துணை நிலைய மேலாளர் சாந்தினிசாரா வரவேற்றார். நிகழ்ச்சித் தொகுப்பாளர் கிருஷ்ணாஹரிராம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...