பாதை மாறும் மாணவர்களை நேர்படுத்தும் நடமாடும் ஆலோசனை மையம்: நெல்லையில் தொடக்கம்
கல்வி, ஒழுக்கத்தில் பின்தங்கிய மாணவர்கள் எதிர் மறையான சிந்தனைகள் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. அவ்வாறு பாதை மாறும் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான


கல்வி, ஒழுக்கத்தில் பின்தங்கிய மாணவர்கள் எதிர் மறையான சிந்தனைகள் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. அவ்வாறு பாதை மாறும் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கும் நடமாடும் மையத்தை திருநெல்வேலியில் தி்ங்கள்கிழமை ஆட்சியர் தொடங்கினார்.
தற்போதைய சூழலில் குடும்பங்களில் நிலவும் பிரச்னைகள், கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக சூழ்நிலை காரணமாக மாணவர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. அவ்வாறு பிரச்னைகளில் சிக்கி தவிக்கும் மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததால், அவர்கள் திசை மாறி செல்லும் நிலை உருவாகிறது.தற்கொலை செய்தல், கல்வியை தொடர முடியாமல் இடையில் விட்டு விடுவது, கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடும் நிலை அதிகரித்து வருகிறது. ஆகவே பாதிக்கப்பட்ட மாணவர், மாணவிகளுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கும் வகையில் இந்த நடமாடும் ஆலோசனை மையம் ஆரம்பிக்கப்பட்டு்ள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்க தமிழகத்தில் சென்னை, திருச்சி, தஞ்சை, வேலூர், சேலம், கோவை, புதுக்கோட்டை, மதுரை, கடலூர், திருநெல்வேலி ஆகிய 10 மண்டலங்களில் நடமாடும் ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை இந்த நடமாடும் ஆலோசனை மையத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பி. உமாமகேஷ்வரி, முதன்மை கல்வி அலுவலர் க. ஜெயக்கண்ணு, தேசிய பசுமைப்படை திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். கஜேந்திரபாபு கலந்து கொண்டனர்.
இந்த மையத்தில் உளவியல் ஆலோசகராக க. முகம்மதுயூனுஸ் இருந்து மாணவர், மாணவிகளுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்குவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...