இந்நிலையில் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு சிதம்பரம் பகுதியில் வழிபறியில் ஈடுபட்ட பரங்கிப்பேட்டை ரங்கப்பிள்ளை மண்டபத்தைச் சேர்ந்த கெளதமன் (24), மஞ்சக்குழியைச் சேர்ந்த கார்த்திக் (24) ஆகிய இருவரை பரங்கிப்பேட்டை அருகே புதன்கிழமை கைது செய்தனர். விசாரணையில் சிதம்பரம் முத்தையாநகரைச் சேர்ந்த வளர்மதி என்பவரை வழிமறித்து 4 பவுன் செயினை பறித்துச் சென்றது தெரியவந்துள்ளது. அதேபோன்று சிதம்பரம் புறவழிச்சாலையில் நர்சிங் மாணவி ஒருவரிடமும், நகரில் பள்ளி மாணவி ஒருவரிடம் செயினை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.