டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

லாரியில் கடத்தி சென்ற 4 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்

ஆந்திராவில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக தமிழகத்திற்கு லாரி மூலம் கடத்த இருந்த 4 டன் செம்மரங்களை கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :15 நவம்பர் 2013, 9:17 am

பா.ஜான்பிரான்சிஸ்

ஆந்திராவில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக தமிழகத்திற்கு லாரி மூலம் கடத்த இருந்த 4 டன் செம்மர கட்டைகளை கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

ஆந்திராவில் இருந்து தொடர்ந்து செம்மரங்கள் கும்மிடிப்பூண்டி மார்க்கமாக கடத்தி வரும்படும் நிலையில் ஆரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி சிப்காட், பாதிரிவேடு , கவரப்பேட்டை போலீஸார் மற்றும் வனத்துறையினர் பல முறை வாகன சோதனையின் போது கடத்தல் செம்மரங்களை பறிமுதல் செய்துள்ளனர்.இந்நிலையில் கும்மிடிப்பூண்டி மார்க்கமாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பைபாஸ் பகுதியில் சிப்காட் சப் இன்ஸ்பெக்டர் முனிவேல் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது வந்த ஒரு லாரியை நிறுத்திய போது அதிலிருந்து லாரி டிரைவர் உட்பட இருவர் இறங்கி ஓடினர். தொடர்ந்து அந்த லாரியை சோதித்த போது லாரியில் செம்மரத்துண்டுகள் பதுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.தொடர்ந்து அந்த செம்மரக் கடத்தல் லாரியை சிப்காட் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து எடை போட்டு பார்த்ததில் அந்த லாரியில் 4 டன் செம்மரத்துண்டுகள் இருந்து தெரியவந்தது. இந்த செம்மரத்துண்டுகளின் மதிப்பு சுமார் 12 லட்சமாகும்.

இந்த செம்மரக் கடத்தல் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் லாரி டிரைவர் மற்றும் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.