தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் ரயில் மறியல்: 172 பேர் கைது

கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு சென்று திருச்சி-சென்னை

News image
Updated On :15 நவம்பர் 2013, 9:35 am

ஜி.சுந்தரராஜன்

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை ரயில்மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 172 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு சென்று திருச்சி-சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில துணை பொதுச்செயலாளர் ரா.காவியச்செல்வன், மாவட்ட துணைச் செயலாளர்கள் குறி்ஞ்சிவளவன், தமிழ்வளவன், வீராசாமி, கங்கை அமரன், பொருளாளர் அதியமான், நகர பொறுப்பாளர்கள் ரத்தினவேலு, பெரு.திருவரசு, ஆதிமூலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் 172 பேரை சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ராமமூர்த்தி, நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் கைது செய்தனர். ரயில் மறியல் போராட்டத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.