கொடுமுடியாறு, அடவிநயினார் அணைகள் நீர்மட்டம் உயர்வு
மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மணிமுத்தாறு அணையில் 2.4 மி.மீ மழையும், ராமநதி


திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அடவிநயினார், கொடுமுடியாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மணிமுத்தாறு அணையில் 2.4 மி.மீ மழையும், ராமநதி அணையில் 2 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 2 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 17 மி.மீ மழையும், பெருஞ்சாணி அணையில் 10.6 மி.மீ மழையும், அம்பாசமுத்திரத்தில் 11.3 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 11.4 மி.மீ மழையும், கன்னடியன் அணைக்கட்டில் 3 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 731.16 கனஅடி நீர்வரத்து இருந்தது. மழை காரணமாக மூடப்பட்டிருந்த பாபநாசம் அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 105.97 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 67.75 அடியாகவும், கடனாநதி அணை நீர்மட்டம் 58.20 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 59.75 அடியாகவும் இருந்தது.
அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 83 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 106.50 அடியாக இருந்தது. அணையில் இருந்து 45 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 15.50 அடியாகவும், வடக்குபச்சையாறு அணையின் நீர்மட்டம் 9.00 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 47.57 அடியாகவும் இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...