வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சேர்வலாறு, கொடுமுடியாறு அணைகள் நீர்மட்டம் உயர்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பருவ மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி

News image
Updated On :19 நவம்பர் 2013, 2:07 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் சேர்வலாறு, கொடுமுடியாறு, கடனாநதி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
 

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பருவ மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை அளவு: பாபநாசம் அணையில் 35 மி.மீ, பாபநாசம் கீழ் அணையில் 25 மி.மீ, சேர்வலாறு அணையில் 24 மி.மீ, மணிமுத்தாறு அணையில் 12.4 மி.மீ, கடனாநதி அணையில் 12 மி.மீ, ராமநதி அணையில் 2 மி.மீ, கருப்பாநதி அணையில் 12 மி.மீ, குண்டாறு அணையில் 3 மி.மீ, அடவிநயினார் அணையில் 5 மி.மீ, வடக்குபச்சையாறு அணையில் 30.8 மி.மீ.

இது தவிர இம்மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்தில் 48.2 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 30 மி.மீ மழையும், ஆய்க்குடியில் 5.6 மி.மீ மழையும், நான்குனேரியில் 22 மி.மீ மழையும், பாளையங்கோட்டையில் 7.4 மி.மீ மழையும், சங்கரன்கோவிலில் 24 மி.மீ மழையும், செங்கோட்டையில் 9 மி.மீ மழையும், சிவகிரியி்ல் 5 மி.மீ மழையும், திருநெல்வேலியில் 3.4 மி.மீ மழையும், வீரகேரளம்புதூரில் 23 மி.மீ மழையும் பெய்துள்ளது.

நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 107.52 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 20.00 அடியாகவும் இருந்தது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 93.80 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 68.30 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 59.30 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 59.75 அடியாகவும் இருந்தது.

அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 109.00 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 47.90 அடியாகவும், வடக்குபச்சையாறு அணையின் நீர்மட்டம் 9.00 அடியாகவும் இருந்தது. மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் பாசனத்திற்கு 35 கனஅடியும், பாபநாசம் அணையில் இருந்து 601 கனஅடியும், கடனாநதி அணையில் இருந்து 45 கனஅடியும், ராமநதி அணையில் இருந்து 30 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1040.93 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 235 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 105.58 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 30 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 38 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 58 கனஅடியும், கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 50 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.