இதற்கிடையே பிரேத பரிசோதனை முடிந்த பிறகும், உடலை உறவினர்கள் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 3 வது நாளான செவ்வாய்க்கிழமை போலீஸார் பேச்சுவார்த்தையை பரமசிவன் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இறுதி சடங்கு நடைபெற்றது.பரமசிவன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவராததால் போலீஸார் குழப்பத்தில் உள்ளனர். நவ. 2 ம் தேதி கோபாலசமுத்திரத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் சுத்தமல்லியில் அதே சமூகத்தை சேர்ந்த தொழிலாளி பரமசிவன் கொலை செய்யப்பட்டதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.