ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரியை தாக்கியதாக மகன் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரியை குடும்பத் தகராறில் தாக்கியதாக அவரது மகனை போலீஸார் கைது செய்தனர்.


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரியை குடும்பத் தகராறில் தாக்கியதாக அவரது மகனை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள, கூமாப்பட்டி-ராமசாமிபுரம், நடுத்தெருவைச் சேர்ந்தவர் பு.வெள்ளைச்சாமி. இவர் ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி. இவரது மகன் பெரியசாமி (44), சொத்தை பிரித்துத் தர வேண்டும் என்று கேட்டு தந்தை வெள்ளைச்சாமியிடம் தகராறு செய்தாராம். இதில் ஏற்பட்ட பிரச்னையில் இரும்புக் கம்பி கொண்டு வெள்ளைச்சாமியை மகன் பெரியசாமி தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
இது குறித்து கூமாப்பட்டி காவல் நிலையத்தில் வெள்ளைச்சாமி கொடுத்த புகாரின் பேரில் அவரது மகன் பெரியசாமியை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...