தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கிராமங்கள் தோறும் சென்று பிரசாரம் மேற்கொள்ள சிதம்பரம் நகர பாஜக முடிவு

டிச.1-ம் தேதி முதல் டிச.20-ம் தேதி வரை கிராமங்கள் தோறும் வீடு, வீடாக சென்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் சாதனைகளை விளக்க பிரசாரம் மேற்கொள்வது என சிதம்பரம் நகர

News image
Updated On :25 நவம்பர் 2013, 11:11 am

ஜி.சுந்தரராஜன்

டிச.1-ம் தேதி முதல் டிச.20-ம் தேதி வரை கிராமங்கள் தோறும் வீடு, வீடாக சென்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் சாதனைகளை விளக்க பிரசாரம் மேற்கொள்வது என சிதம்பரம் நகர பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.

சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, குமராட்சி, காட்டுமன்னார்கோயில் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கூட்டம் சிதம்பரம் கீழசன்னதியில் ஹோட்டல் சபாநயாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் நகரத் தலைவர் ஆர்.திருமாறன் தலைமை வகித்தார். அகில பாரத பொதுக்குழு உறுப்பினர் கா.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் ஜெ.சுகுமாறன், மாவட்ட துணைத் தலைவர் உமாபதிசிவம், மாவட்ட பொருளாளர் வே.ராஜரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட விவசாய அணித் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன், குமராட்சி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சி.பழனிராஜா, தேர்தல் பொறுப்பாளர் பால.ரவி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.நடனம், ஒன்றியத் தலைவர் சத்யாரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர பொதுச்செயலாளர் ஜி.வெங்கடேசன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட நகர நிர்வாகிகள்: பொதுச்செயலாளர் ஜி.வெங்கடேசன், துணைத் தலைவர்கள்- கே.நடராஜன், கே.சின்னிகிருஷ்ணன், பி.சிவக்குமார், நகரச் செயலாளர்கள்- காஷ்மீர் நடராஜன், என்.ஜெயபால், எம்.சபாநாயகம், பொருளாளர்- டி.பாலகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.