சிதம்பரம் அருகே வில்லியநல்லூரில் அரசு பஸ் டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்து 6 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.40ஆயிரத்தை திருடிச்சென்றனர்.
சிதம்பரம் அருகே வில்லியநல்லூர் கிராமத்தில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி (53). அரசு பஸ் டிரைவரான இவரது மனைவி சிங்கப்பூரில் உள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணமூர்த்தி வீட்டை பூட்டிக்கொண்டு சென்னை சென்றார்.
திங்கள்கிழமை பிறபகல் வீட்டிற்கு வந்த போது பின்புறக் கதவை உடைத்து மர்ம நபர்கள் புகுந்து பீரோவிலிருந்த 6 பவுன் நகைகள், ரொக்கம் ரூ.40ஆயிரம் மற்றும் பொருள்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.