நெல்லை அருகே விபத்துக்களில் இருவர் சாவு
நாகர்கோவில் ராமன்புதூரை சேர்ந்த பாஸ்கரன் மகன் அஜித்குமார் (34). நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனி பகுதியை சேர்ந்த பேட்ரிக் (46). பேட்ரிக் ஊடகம் ஒன்றில் வேலை செய்து


திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதியில் நிகழ்ந்த இரு சாலை விபத்துக்களில் இளைஞர், பூ வியாபாரி ஆகியோர் இறந்தனர்.
நாகர்கோவில் ராமன்புதூரை சேர்ந்த பாஸ்கரன் மகன் அஜித்குமார் (34). நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனி பகுதியை சேர்ந்த பேட்ரிக் (46). பேட்ரிக் ஊடகம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இருவரும் நண்பர்கள். ஏற்காட்டில் இடைத்தேர்தல் பிரசாரம் தொடர்பாக செய்தியினை சேகரிக்க இருவரும் நாகர்கோவில் இருந்து காரில் ஏற்காடு சென்றனராம்.
திருநெல்வேலி அருகே தாழையூத்தில் நான்கு வழிசாலையில் வந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையோரமாக நின்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அஜித்குமார் சம்பவ இடத்திலே இறந்தார். இது குறித்து தாழையூத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
வியாபாரி சாவு:
பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் ஆறுமுகம் என்ற ராஜன் (23). கட்டடத் தொழிலாளியான இவர் பூ வியாபாரம் செய்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு பர்கிட்மாநகரில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு ஆறுமுகம் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தாராம்.
அப்போது திருநெல்வேலியில் இருந்து பர்கிட் மாநகரம் நோக்கி சென்ற அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமைடந்த ஆறுமுகம் என்ற ராஜன் மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். இவருக்கு 6 மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. பாளையங்கோட்டை போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...