மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மின்சாரம் பாய்ந்து முதியவர், பெண் சாவு

மதுக்கூர் புது நடுத் தெருவைச் சேர்ந்த விவசாயி எம். சண்முகவேலு (65). பக்கத்து வீட்டில் இவரது அண்ணன் மகன் ராஜேந்திரன் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இருவர் வீட்டுக்கும் இடையே கம்பி வேலி

News image
Updated On :26 நவம்பர் 2013, 10:59 am

பார்திபன்

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூரில் மின்சாரம் பாய்ந்து முதியவரும், அவரது அண்ணன் மருமகளும் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

மதுக்கூர் புது நடுத் தெருவைச் சேர்ந்த விவசாயி எம். சண்முகவேலு (65). பக்கத்து வீட்டில் இவரது அண்ணன் மகன் ராஜேந்திரன் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இருவர் வீட்டுக்கும் இடையே கம்பி வேலி உள்ளது.ராஜேந்திரன் மனைவி ராமஜெயம் (43) தனது வீட்டுக்கு அருகிலுள்ள குடிநீர் குழாயிலிருந்து தினமும் குடத்தில் தண்ணீர் பிடித்து கம்பி வேலிக்கு மேலாக சண்முகவேலுவிடம் கொடுப்பாராம்.

இந்நிலையில் வழக்கம்போல் திங்கள்கிழமை மாலை ராமஜெயம் கம்பி வேலிக்கு மேலாக சண்முகவேலுவிடம் தண்ணீர் குடத்தை கொடுத்துள்ளார். அப்போது வீட்டின் மின் இணைப்புக்காக பூமியில் பதிக்கப்பட்டிருந்த எர்த் வயர் மூலம் கம்பி வேலியில் முழு அளவு மின்சாரம்  இருந்துள்ளது. இதனால் தண்ணீர் குடத்தை கொடுத்து, வாங்கும்போது கம்பி வேலியில் இருவருடைய கைகளும் பட்டதால் அதிலிருந்த மின்சாரம் பாய்ந்து சண்முகவேலு, ராமஜெயம் இருவரும் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர்.இது குறித்து மதுக்கூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.