தூத்துக்குடி அனல் மின் நிலைய 3-வது யூனிட்டில் பராமரிப்பு பணிகள் தொடக்கம்
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3-வது யூனிட்டில் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி செவ்வாய்க்கிழமை இரவு நிறுத்தப்பட்டது. ஏறத்தாழ 35 நாள்கள் வரை பராமரிப்பு பணிகள்


தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3-வது யூனிட்டில் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி செவ்வாய்க்கிழமை இரவு நிறுத்தப்பட்டது. ஏறத்தாழ 35 நாள்கள் வரை பராமரிப்பு பணிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது என தலைமைப் பொறியாளர் தெரிவித்தார்.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இதன்மூலம் நாளொன்றுக்கு 1050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அனல் மின்நிலையம் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால் சில யூனிட்டுகளில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக 3-வது யூனிட்டில் அடிக்கடி ஏற்படும் பழுதை சரிசெய்வதில் தாமதம் நிலவி வந்தது. இதையெடுத்து, ரூ. 6 கோடி செலவில் 3-வது யூனிட்டில் முழு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. டிசம்பர் மாதத்தில் இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனல் மின் நிலைய நிர்வாகம் முடிவு செய்திருந்தது.
கடந்த 15 நாள்களில் 6 முறைக்கு மேல் 3-வது யூனிட்டில் பழுது ஏற்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை பகல் 11 மணியளவில் மீண்டும் பழுது ஏற்பட்டது. இதையெடுத்து, பழுதை சரிசெய்வதைவிட பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என பொறியாளர்கள் முடிவு செய்தனர்.
இதையெடுத்து, 3-வது யூனிட்டில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஏறத்தாழ 52 அடி உயரம் கொண்ட பாய்லர் டியூப்பில் நடுப்பகுதியில் பழுதான 20 அடி முழுமையாக வெட்டி எடுக்கப்பட்டு புதிதாக டியூப் அமைக்கப்பட உள்ளது. 35 நாள்களுக்குள் பராமரிப்பு பணிகளை முடிக்க அனல் மின் நிலைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அனல் மின்நிலைய தலைமைப் பொறியாளர் வள்ளியப்பன் கூறியது:
3-வது யூனிட்டில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவதால், முழுமையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. நாக்பூரில் இருந்து உதிரப் பாகங்கள் வரவேண்டியுள்ளது. குறிப்பிட்டக் காலக்கட்டத்துக்குள் உதிரி பாகங்கள் வந்து சேர்ந்துவிட்டால் 35 நாள்களுக்குள் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து மின் உற்பத்தி தொடங்க வாய்ப்பு உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...