வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

களக்காடு, முண்டன்துறை காப்பகத்தில் யானைகள் அட்டகாசத்தை தடுக்க அகழி

களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருவதை தடுக்கும் வகையில் ரூ. 1.24 கோடி மதிப்பில் 32 கி.மீ தொலைவுக்கு அகழி அமைக்கப்படுகிறது.

News image
Updated On :28 நவம்பர் 2013, 11:44 am

ஷேக் அப்துல்காதர்

களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருவதை தடுக்கும் வகையில் ரூ. 1.24 கோடி மதிப்பில் 32 கி.மீ தொலைவுக்கு அகழி அமைக்கப்படுகிறது.

களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் களக்காடு, பாபநாசம், கடையம் பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் விளை நிலங்களை பெருமளவில் சேதமடைந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.

கடையநல்லூர், புளியங்குடி வனப்பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருவதை தடுக்கும் வகையில் அடவிநயினார் அணையில் இருந்து கடையநல்லூர் வரை அகழி அமைக்கப்பட்டது. மேலும் ரூ. 1.50 கோடி மதிப்பில் தற்போது கடையநல்லூரில் இருந்து சங்கரன்கோவில் வரை 50 கி.மீ தொலைவுக்கு அகழி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட விலங்கினங்கள் அட்டகாசம் செய்வது தடுக்கும் வகையில் களக்காடு சரகத்தில் 18 கி.மீ தொலைவுக்கு ரூ. 81.72 லட்சம் மதிப்பில் அகழி அமைக்கப்படுகிறது. இதேபோல் முண்டன்துறை சரகத்தில் பாபநாசம், கடையம் வனப்பகுதியில் 11 கி.மீ தொலைவுக்கு

ரூ. 41.78 லட்சம் மதிப்பில் அகழி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக எல்லையில் 32 கி.மீ தொலைவுக்கு ரூ. 1 கோடியே 23 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அகழி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.