சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நெல்லை: விதிகளை பின்பற்றாத 74 வர்த்தக நிறுவனங்களுக்கு அபராதம்

காந்தி ஜெயந்தி தினமான புதன்கிழமை கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகிய நிறுவனங்களில் பணி செய்யும் சிப்பந்திகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். மாறாக அன்ற

News image
Updated On :2 அக்டோபர் 2013, 4:05 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் விதிகளை கடைபிடிக்காத 74 வர்த்தக நிறுவனங்களுக்கு புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

காந்தி ஜெயந்தி தினமான புதன்கிழமை கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகிய நிறுவனங்களில் பணி செய்யும் சிப்பந்திகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். மாறாக அன்றைய தினம் பணி செய்யும் சிப்பந்திகளுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது மாற்று தினத்தில் விடுப்போ அளிக்க வேண்டும். அவ்வாறு பணிபுரியும் சிப்பந்திகளிடம் விதிகளின்படி வரையறுக்கப்பட்ட நமூனாவில் கையெழுத்து பெற வேண்டும்.

புதன்கிழமை இம்மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தென்காசி, மேலப்பாளையம், சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், வள்ளியூர் பகுதியில் மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் ஜெ. காளிதாஸ் தலைமையில் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் இம்மாவட்டத்தில் 40 கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஒரு பீடி நிறுவனம், 25 உணவு நிறுவனங்கள், 8 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகிய 74 நிறுவனங்களில் மேற்கண்ட விதிகள் பின்பற்றாதது தெரியவந்தது. இதையடுத்து மேற்கண்ட நிறுவனங்கள் மீது முரண்பாட்டிற்காக சட்ட விதிகளின் கீழ் இசைந்து தீர்வு காணும் அறிவிப்பு வழங்கி ரூ. 24,600 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.