சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய இளைஞரை பிடித்த போலீஸார்: அம்பையில் பரபரப்பு

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் மூதாட்டியை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார். அங்கிருந்து தப்பி ஓடிய இளைஞரை போலீஸார் மடக்கிப் பிடித்த

News image
Updated On :3 அக்டோபர் 2013, 10:49 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் மூதாட்டியை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார். அங்கிருந்து தப்பி ஓடிய இளைஞரை போலீஸார் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  

கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி வடக்குத் தெருவை சேர்ந்த தாடிகிருஷ்ணன் மகன் பெருமாள்பாண்டின் (35). பாமக பிரமுகரான இவர் கடந்த 2010 ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பெருமாள்பாண்டியனின் தம்பி கந்தன் (27). இவர் இதே ஊரை சேர்ந்த முத்துலட்சுமி என்பவரின் பாட்டியை தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்தார். வீரவநல்லூர், மேலப்பாளையம் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் போலீஸார் கந்தனை தேடி வந்தனர்.

இதற்கிடையே கடந்த 5 மாதங்களாக தேடப்பட்டு வந்த கந்தன் வியாழக்கிழமை அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் மூதாட்டியை தாக்கிய வழக்கில் சரணடைந்தார். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த கந்தன் போலீசை கண்டதும் நீதிமன்றச் சுவர் ஏறிக் குதித்து தப்பி ஓடினார்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் பொன்னுசாமி, உதவி ஆய்வாளர் இந்திரா மற்றும் போலீஸார் கந்தனை பின் தொடர்ந்தனர். நீதிமன்றத்தின் பின்புறமாக ஓடி சார் கரூவூலக அலுவலகத்தை கடந்து நதியுன்னி கால்வாயில் குதித்து அரசு மருத்துவமனைக்கு பின்புறம் முட்புதரில் பதுங்கி இருந்த கந்தனை போலீஸார் பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பி ஓடிய கந்தனை 20 நிமிடத்தில் போலீஸார் பிடித்த சம்பவம் அம்பாசமுத்திரத்தில் பரபரப்பை ஏற்படு்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.