கொடைக்கானலில் நிலப்பிரச்சனைக் காரணமாக ஒருவருக்கு அரிவாள் வெட்டு
கொடைக்கானலில் நிலப்பிரச்சனைக் காரணமாக அரிவாளால் வெட்டியவர்களை போலீசார் கைது செய்தனர்.


கொடைக்கானலில் நிலப்பிரச்சனைக் காரணமாக அரிவாளால் வெட்டியவர்களை போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானல் அருகே ஆலந்துரை கருகாச்சோலைப் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் இவருக்கும் ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி என்பவருக்கும் நிலப்பிரச்சனை சம்மந்தமாக முன் விரோதம் இருந்து வருகிறது.இந் நிலையில் முருகன் ஆலந்துரைப் பகுதியில் உள்ள தனது நிலத்திற்கு சென்ற போது தங்கபாண்டி என்பவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இதில் முருகனை தங்கபாண்டி தரப்பினர் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து முருகன் தரப்பினருக்கும், தங்கபாண்டி தரப்பினருக்கும்,தகராறு ஏற்பட்டுள்ளது இது குறித்து இரு தரப்பினரும் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து பெரியபாண்டி,பால்பாண்டி,மற்றும் சத்தியத்தேவர், ராஜ்குமார்,ராமர் ஆகிய இருதரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த முருகன் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...