சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மறுக்கப்படும் கல்வி: குழந்தைகளுடன் ஆட்சியரிடம் தம்பதியினர் மனு

தங்களது குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவதாக கூலித் தொழிலாளி மனைவியுடன் வந்து திருநெல்வேலியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தார்.

News image
Updated On :7 அக்டோபர் 2013, 12:16 pm

ஷேக் அப்துல்காதர்

தங்களது குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவதாக கூலித் தொழிலாளி மனைவியுடன் வந்து திருநெல்வேலியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தார்.

நான்குனேரி வட்டம், மூலக்கரைபட்டி ஊராட்சிக்குட்பட்ட கடம்பன்குளம் கிராமம் கிழக்குத் தெருவை சேர்ந்த முத்தையை மகன் கணேசன் என்ற ஜோசப் (39). கூலித் தொழிலாள். இவரது மனைவி மரியகலா. இத்தம்பதிக்கு இம்மானுவேல் (6), கிருபா (5) ஆகிய குழந்தைகள் உள்ளன. குழந்தைகள் அங்குள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் முறையை யூ.கே.சி. எல்.கே.ஜி பயி்ன்று வருகின்றனர்.

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் கணேசன் தம்பதியினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வருகிறோம். எங்கள் குழந்தைகள் அங்குள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். நாங்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவதற்கு அக்கிராமத்தினர் எங்களை தனிமைப்படுத்தி வருகின்றனர்.இதன் காரணமாக கோவிலுக்கு நாங்கள் வரிகொடுக்கவில்லை. இதற்கிடையே எங்கள் குழந்தைகளை பள்ளியில் கல்வி கற்க அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்து எங்களுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காமல் குழந்தைகளுடன் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம் என்று புகாரில் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.