மங்கல்யா செயற்கைகோள் அக். 29 ல் செலுத்தப்படும்: இஸ்ரோ விஞ்ஞானி எஸ். இங்கர்சால்
உலக விண்வெளி வாரவிழா அக். 4 ம் முதல் 10 ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதையொட்டி மாவட்ட அறிவியல் மையத்தில் மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. திங்கள்கிழமை பள்ளி


மங்கல்யா செயற்கைகோள் அக். 29 ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ விஞ்ஞானி எஸ். இங்கர்சால் தெரிவித்தார்.
உலக விண்வெளி வாரவிழா அக். 4 ம் முதல் 10 ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதையொட்டி மாவட்ட அறிவியல் மையத்தில் மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. திங்கள்கிழமை பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. விண்வெளிக்கு இன்பச் சுற்றுலா, விண்வெளி தேடல் மனிதன் மூலமா? இயந்திரன் வழியிலா? என்ற தலைப்பில் நடைபெற்ற இப்போட்டியில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து 160 மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர்.இளையோர் தமிழ் பிரிவில் மார்த்தாண்டம் கிறிஸ்துராஜா மெட்ரிக் பள்ளி மாணவி ஷெர்மின்ஓவியாஜெகத் முதலிடமும், திருநெல்வேலி புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவன் தனஜெயன் 2 வது இடமும், பெரியதாழை லிட்டில் பிளவர் பள்ளி மாணவி ரூபிகா 3 வது இடமும் பெற்றனர்.
இளையோர் ஆங்கிலம் பிரிவில் திருவட்டார் எக்ஸல் மெட்ரிக் பள்ளி மாணவன் ஆனந்தகிருஷ்ணன் முதலிடமும், இலஞ்சி பாரத் மாண்டிச்சேரி பள்ளி மாணவி ஆர். வைரபிரவீணா 2 வது இடமும், நாகர்கோவில் செயின்ட் ஜோஸ் கான்வென்ட் மாணவன் கார்டியபிரகாஷ், திருநெல்வேலி வித்யா மந்திர் பள்ளி மாணவன் பி. மகிளன் 3 வது இடமும் பெற்றனர்.மூத்தோர் தமிழ் பிரிவில் திசையன்விளை ஜெயராஜ் மெட்ரிக் பள்ளி மாணவி சிவரஞ்சனி முதலிடமும், தூத்துக்குடி சி.எம். மேல்நிலைப் பள்ளி மாணவன் சங்கரநாராயணன் 2 வது இடமும், விழுதம்பலம் செயின்ட் ஜோசப் பள்ளி மாணவன் அஸ்வின் 3 வது இடமும் பெற்றனர்.மூத்தோர் ஆங்கிலம் பிரிவில் தூத்துக்குடி கமலாவதி பள்ளி மாணவி கே. மதுமிதா முதலிடமும், ஆத்தூர் என்.வி.கே.எஸ் பள்ளி மாணவி எம். சிஜி 2 வது இடமும், தூத்துக்குடி ஸ்பிக் நகர் பள்ளி மாணவன் ஜி. கார்த்திக் 3 வது இடமும் பெற்றனர்.
விஞ்ஞானிகள் சந்திப்பு: இதனை தொடர்ந்து விஞ்ஞானிகள், மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விஞ்ஞானிகள் பதில் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் விஞ்ஞானிகள் எஸ். இங்கர்சால், ஆர்.எஸ். கண்ணு, வெங்டேஷ்வரன், ஜெபசிகாமணி, சாந்தன், முருகேசன், ஜேசுஅம்மாள், கார்த்திக், கமல், அந்தோணி, மாவட்ட அறிவியல் மைய அலுவலர் டி. சீதாராம், அறிவியல் மைய கல்வி உதவியாளர் பி. லெனின் கலந்து கொண்டனர்.
மங்கல்யா செயற்கைகோள்: பின்னர் விஞ்ஞானி எஸ். இங்கர்சால் கூறியபோது, இந்திய விண்வெளி ஆராய்ச்சிகளை மக்களுக்கு எடுத்து சொல்லவும், மாணவர்களுக்கான அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில் உலக விண்வெளி வாரவிழா நடத்தப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் கருத்தரங்கு மூலம் மாணவர்களின் திறனை மேம்படு்த்தப்பட்டு வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிகள் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை தக்க வைக்க முடியும் என நம்புகிறோம்.
மங்கல்யா எனும் செயற்கைகோள் அக். 29 ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. அது 299 நாட்களில் 22 கோடி கி.மீ தொலைவு சென்று செவ்வாய் கிரஹத்தை அடைந்து அங்கு சேகரிக்கும் தகவல்களை தெரிவிக்கும். சந்திராயன் 2 செயற்கைகோள் வடிவமைப்பில் உள்ளது. இந்த செயற்கைகோளுடன் அனுப்பப்படும் ரோவர் வாகனம் செவ்வாய்கிரஹத்தில் நடந்து, ஊர்ந்து சென்று தகவல்களை சேகரித்து தெரிவிக்கும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...