மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இந்திய கடல் எல்லையில் சீன போர்க் கப்பல் சுற்றி வளைப்பு?

இந்திய கடல் எல்லைப் பகுதியில் போர்க் கப்பல் ஒன்றை கடலோரக் காவல் படையினர் சுற்றி வளைத்தனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2013, 7:22 am

இன்பராஜ்

இந்திய கடல் எல்லைப் பகுதியில் போர்க் கப்பல் ஒன்றை கடலோரக் காவல் படையினர் சுற்றி வளைத்தனர்.

தூத்துக்குடி கடலோரமாக வந்த மர்மக் கப்பலை தூத்துக்குடி கடலோரக் காவல் படையினர் சுற்றி வளைத்து பிடித்து, அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த கப்பல் சீனாவைச் சேர்ந்த போர்க் கப்பல் என்று முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடலோரக் காவல் படையினர் கப்பலில் இருந்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதால் விரைவில் அது பற்றிய உறுதியான தகவல்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கடலோரக் காவல் படையின் தூத்துக்குடி பிரிவு கட்டளை அதிகாரி ஆனந்தகுமார் கூறுகையில், கப்பல் பிடிபட்டது உண்மை. அது வியாபாரக் கப்பலோ, மீன் பிடி கப்பலோ இல்லை. போர்க் கப்பல் என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேற்கொண்டு எந்த தகவலையும் இப்போதைக்குக் கூற இயலாது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.