தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பூட்டிய வீட்டில் 3 லட்சம் மதிப்புள்ள நகை, பொருட்கள் திருட்டு

அறந்தாங்கி கெங்காதரபுரம் அரசு போக்குவரகத்து பணிமனை எதிரில் வசிப்பவர்  முத்து மகன் எம்.சுபாஸ்சந்திரபோஸ் (34) இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி

News image
Updated On :15 அக்டோபர் 2013, 12:13 pm

கவியழகன்

அறந்தாங்கியில் திங்கள் கிழமை இரவு பூட்டியிருந்த வீட்டில் 13 பவுன் நகை, ரூ.31ஆயிரம் ரொக்கப்பணம், எல்.சி.டி டி.வி உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருóட்டு போயின.

அறந்தாங்கி கெங்காதரபுரம் அரசு போக்குவரகத்து பணிமனை எதிரில் வசிப்பவர்  முத்து மகன் எம்.சுபாஸ்சந்திரபோஸ் (34) இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். திங்கள் கிழமை காலை மேட்டுபாளையம் அரசு பேரூந்தில் சென்றுவிட்டார்.இவரது மனைவி அம்பிகா(27) இவர் தனது தாயார் வீட்டிற்கு சனிக்கிழமையே சென்றுவிட்டார், பூட்டியிருந்த வீட்டிற்கு செவ்வாய்கிழமை காலை சுபாஸ்சந்திரபோஸ் வரும் போது முன்பக்க கேட் பூட்டு தனியாக தொங்கிகொண்டிருந்திருக்கிறது உள்ளே கதவு உடைக்கப்பட்டு படுக்கை அறையில்  பீரோவிற்குள் இருந்த 13 பவுன் தங்க நகைகள், ரூ.31ஆயிரம் ரொக்கப்பணம், சுவரில் மாட்டியிருந்த எல்.சி.டீ, வண்ண்த் தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டிருந்தன.

இது குறித்து புகாரின் பேரில் அறந்தாங்கி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.