சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நெல்லை மாவட்டத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

திருநெல்வேலி மாவட்டத்தில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நுகர்பொருள் வாணிபக்கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்

News image
Updated On :15 அக்டோபர் 2013, 9:18 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நுகர்பொருள் வாணிபக்கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை அடுத்து பிற்பகல் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கியில் பணி செய்யும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் பீஸ் ரேட் அடிப்படையில் கூலி பெற்று வருகின்றனர். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஜனநாயக அங்காடிகள் சுமை தூக்குவோர் மற்றும் பொதுத்தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.இது குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாத காரணத்தால் செவ்வாய்க்கிழமை (அக். 15 ம் தேதி) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்தனர். இதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நான்குனேரி, வள்ளியூர், அம்பாசமுத்திரம், தென்காசி, சங்கரன்கோவில், ஆலங்குளம், வாசுதேவநல்லூர் ஆகிய கிட்டங்கி மற்றும் தாழையூத்து நவீன அரிசி ஆலையில் பணி செய்யும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் புறக்கணித்தனர். கிட்டங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காலமுறை ஊதியம் வழங்குவதாக நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாகஇயக்குநர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது என்றார் அமைப்பின் மாநிலத் தலைவர் த. சங்கரபாண்டியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.