மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

 திருமலை 300ரூ விரைவு தரிசன டிக்கெட்டில் மீண்டும் ஊழல்

திருமலை ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள 300ரூ விரைவு தரிசன டிக்கெட்டில் மீண்டும் ஊழல்

News image
Updated On :19 அக்டோபர் 2013, 3:28 pm

திருமலை ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள 300ரூ விரைவு தரிசன டிக்கெட்டில் மீண்டும் ஊழல் நடைபெற்றது தெரிய வந்துள்ளது.

         திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் 300ரூ விரைவு தரிசன டிக்கெட்டை நடைமுறைபடுத்தி உள்ளது. அங்கு கண்காணிப்புக்கேமரா ஆப்பரேட்டராக பணிபுரியும் திருப்பதியை சேர்ந்த சைதன்யா அதில் ஊழல் நடத்தியது தெரிய வந்தது. தேவஸ்தான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு நடத்திய சோதனையில் இது வெளிச்சத்திற்கு வந்தது.

      பக்தர்களுக்கு அளித்த டிக்கெட்டுகளை மறுபடியும் ஸ்கேன் செய்து திருட்டுதனமாக அதே டிக்கெட்டை மீண்டும் மற்றவர்களுக்கு விற்று வந்துள்ளார். சோதனையின் போது  ஒரு சில எண்கள் மட்டும் மீண்டும் மீண்டுóம் தோன்றவே அதிகாரிகள் முழு சோதனையில் ஈடுபட்டனர். பின் ஊழலில் ஈடுபட்ட சைதன்யாவை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வைகுண்டம் ஒன்றில் உள்ள தேவஸ்தான அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்ததுள்ளது. மேலும் இதே போல் கடந்த 3 மாதங்களுக்கு முன் ஆந்திரா வங்கியில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் 4 பேர் சுமார் 48 லட்சம் ரூபாய் வரை ஊழல் செய்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.