கோபி நகராட்சி பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்து இருந்த கட்டடங்களை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினர்.
கோபி நகராட்சிக்கு உள்பட்ட அனுமந்தராயன் கோவில் வீதி, தெப்பக்குளம் வீதிகளில் சாலையை ஒட்டி இருபுறமும் கட்டடங்கள் மற்றும் நடைபாதைகள் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது.இந்த தெருக்களில் நகைக்கடைகள், துணிக்கடைகள் உள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த தெருக்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி, சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு ஒரு வாரத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
கோபி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கிருஷ்ணகுமார் உத்தரவின் பேரில் அனுமந்தராயன் கோயில் வீதி, தெப்பக்குளம் வீதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட நடைபாதை மற்றும் கட்டடங்களை நகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
மேலும் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகளையும் அதிகாரிகள் அகற்றினர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்ட நகராட்சி பணியாளர்களுக்கு கோபி போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மெஸ்ஸிக்குக் காயம்..! கால்பந்து உலகக் கோப்பையில் விளையாடுவாரா?

வாய் துர்நாற்றத்தைப் போக்க என்ன செய்ய வேண்டும்?

வாழை - 2 படத்தைத் தயாரிக்கும் நெட்பிளிக்ஸ்?

நிலமிழந்த காஸா விவசாயிகள் புரட்சி! டின்களில் காய்கறி செடிகள் வளர்த்து சாதனை
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy


