சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் 3 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

பாளையங்கோட்டையில் தூய யோவான் கல்லூரியில் பேராசிரியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 3 வது நாளாக செவ்வாய்க்கிழமை பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிருப்பு

News image
Updated On :22 அக்டோபர் 2013, 9:00 am

ஷேக் அப்துல்காதர்

பாளையங்கோட்டையில் தூய யோவான் கல்லூரியில் பேராசிரியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 3 வது நாளாக செவ்வாய்க்கிழமை பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இக்கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவர்களின் ஓய்வு அறைகளை திறக்க வேண்டும். மாணவர் பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மாணவர்கள், பேராசிரியர்கள் திடீரென உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் பீட்டர்பேரின்பராஜ், ஆங்கிலத்துறை பேராசிரியர் ஹெய்ஸ்தாசன் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்து திங்கள்கிழமை மாணவர்கள், பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே தேர்வு நெருங்கி வரும் நிலையில் இளங்கலை வகுப்புகளை திறக்க வேண்டும். பேராசிரியர்களின் தற்காலிக பணியிடை நீக்கம் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி 3 வது நாளாக கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூட்டா அமைப்பின் தலைவர் அருள்ஞானம், இந்திய மாணவர் பேரவை மாவட்டச் செயலர் அசோக், துணைச் செயலர் விஜயகுமார் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருமண்டல பெருமன்ற உறுப்பினர் வேதநாயகம், இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.