மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆற்றில் மூழ்கி முதியவர் சாவு

பட்டுக்கோட்டை கீழப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆர். சௌந்தரராஜன் (55). திருமணம் ஆகாதவர். இவர் நீண்ட காலமாக மன நிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவ்வப்போது வலிப்பு நோயால்

News image
Updated On :25 அக்டோபர் 2013, 12:37 pm

பார்திபன்

பட்டுக்கோட்டையில் ஆற்றில் மூழ்கி வியாழக்கிழமை மாலை முதியவர் உயிரிழந்தார்.

பட்டுக்கோட்டை கீழப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆர். சௌந்தரராஜன் (55). திருமணம் ஆகாதவர். இவர் நீண்ட காலமாக மன நிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவ்வப்போது வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை மாலை பெருமாள்கோயில் தெரு மகாராஜசமுத்திரம் காட்டாற்றில் குளித்துள்ளார் சௌந்தரராஜன். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டாராம்.வெள்ளிக்கிழமை காலை ஆற்றோரத்தில் சௌந்தரராஜன் இறந்து கிடக்கும் தகவலறிந்த  பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.