சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நெல்லை மாவட்டத்தில் பாசனத்திற்கு 4 அணைகளில் தண்ணீர் திறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் ஆகிய 4 அணைகளில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு வெள்ளிக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் 32,025

News image
Updated On :25 அக்டோபர் 2013, 12:50 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் ஆகிய 4 அணைகளில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு வெள்ளிக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் 32,025 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவித்தார்.

தாமிரவருணி பாசனத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 11 கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் 86,107 ஏக்கர் நிலங்களுக்கு பாபநாசம் அணையில் இருந்து அக். 20 ம் தேதி பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதை தொடர்ந்து இம்மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் அணைகளில் இருந்து வெள்ளிக்கிழமை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன், ராமநதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்த, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் உத்தரவின்படி இம்மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி, அடவிநயினார், கருப்பாநதி அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அம்பாசமுத்திரம், ஆலங்குளம், தென்காசி, செங்கோட்டை, வீரகேரளம்புதூர் வட்டங்களில் 32,025 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

வடகிழக்கு பருவ மழையினால் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைகளுக்கு நீர்வரத்து கிடைக்கப்பெறவில்லை எனில் அணைகளில் இருக்கும் நீரை அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்களுக்கு முழுமையாக பாசனம் பெறும் வகையில் சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்படும். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும். பொதுமக்கள், விவசாயிகள் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார் அவர்.கடனாநதி அணையில் விநாடிக்கு 125 கனஅடியும், ராமநதி அணையில் இருந்து 60 கனஅடியும், கருப்பாநதி அணையில் இருந்து 25 கனஅடியும், அடவிநயினார் அணையில் இருந்து 45 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வரும் 2014 ம் ஆண்டு மார்ச் 31 ம் தேதி வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படு்ம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.கடனாநதி அணையின் நீர்மட்டம் 50.00 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 54.00 அடியாகவும் இருந்தது. இவ்விரு அணைகளுக்கும் விநாடிக்கு தலா 10 கனஅடி நீர்வரத்து இருந்தது.

நிகழ்ச்சியில் சிற்றாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் சி. நிர்மல்கிறிஸ்துதாஸ், உதவி செயற்பொறியாளர் என். ஞானசேகரன், உதவி பொறியாளர் ஆர். முருகேசன், இளம்பொறியாளர் ஏ.டி. அப்துல்ரகுமான், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க. மாரியப்பன், நீர்பாசன சங்க தலைவர்கள் ஜீவா, வேல்பாண்டியன், சங்குகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிற அணைகளில் முறைப்படி அதிகாரிகள் தண்ணீர் திறந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.