நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்
தருமபுரி மண்டல கூட்டுறவுத் சங்கங்களின் இணைப்பதிவாளர் கி.ரேணுகா மற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகள் தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் உள்ள 70


தருமபுரி மாவட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்ட இரண்டு நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரி மண்டல கூட்டுறவுத் சங்கங்களின் இணைப்பதிவாளர் கி.ரேணுகா மற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகள் தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் உள்ள 70 நியாய விலைக்கடைகளில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், திப்பிரெட்டிஅள்ளி மற்றும் குக்கல்மலை நியாய விலைக்கடைகளில் பொது விநியோகம் திட்ட பொருள்கள் விற்பனையில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், இந்த கடையின் விற்பனையாளர்களான பி.சுந்தராஜன் மற்றும் எஸ்.மாதேஸ் ஆகிய இருவரும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, இருவரையும் சனிக்கிழமை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கி.ரேணுகா தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், பொது விநியோக திட்டப் பணிக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும், முறைகேடுகளிலும் ஈடுபடும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...