கஞ்சா விற்ற தந்தை மகன் உள்பட மூவர் கைது
மாரண்டஹள்ளி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தருமபுரி மாவட்ட எஸ்பி அஸ்ராகார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, அந்த பகுதியில் போலீஸôர் சோதனையில் ஈடுபட்டனர். இதில்


தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த தந்தை மகன் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மாரண்டஹள்ளி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தருமபுரி மாவட்ட எஸ்பி அஸ்ராகார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, அந்த பகுதியில் போலீஸôர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மாரண்டஹள்ளி புதுத்தெருவைச் சேர்ந்த திம்மாராயன்(62) என்பவர் தனது வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரிடம் போலீஸôர் மேற்கொண்ட விசாரணையில் அவரது குடும்பத்துடன் கஞ்சா விற்று வந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து திம்மாராயன் மற்றும் அவரது மகன் தியாகராஜன்(32), மருகமள் லட்சுமி(28) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய திம்மாரயனின் மனைவி முனியம்மாள்(55) என்பவரை தேடி வருகின்றனர். கைது செய்தவர்களிடமிருந்து சுமார் 70 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...