சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அம்பை அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் தீ: போக்குவரத்து பாதிப்பு

அம்பாசமுத்திரத்தில் வைக்கோல் போர் ஏற்றி வந்த லாரியில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 300 கட்டு வைக்கோல் போர் எரி்ந்து சேதமடைந்தது. இந்த விபத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

News image
Updated On :27 அக்டோபர் 2013, 2:13 pm

ஷேக் அப்துல்காதர்

அம்பாசமுத்திரத்தில் வைக்கோல் போர் ஏற்றி வந்த லாரியில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 300 கட்டு வைக்கோல் போர் எரி்ந்து சேதமடைந்தது. இந்த விபத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் தென்காசி பிரதான சாலையில் அம்பாசமுத்திரம் அருகே நுகர்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கி அருகில் வயலில் இருந்து வைக்கோல் கட்டுகளை ஏற்றிக் கொண்டு பிரதான சாலைக்கு வந்து கொண்டிருந்தது. லாரியை கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் ஓட்டினார்.

பிரதான சாலைக்கு வந்த போது, எதிர்பாராத விதமாக மின் வயர் உரசியதில் லாரியில் இருந்த வைக்கோல் கட்டுகளில் தீப்பற்றியது. தீ மளமளவென எரியத் தொடங்கியதால் அங்கு புகை மண்டலமாக காட்சியளித்து. தகவலறிந்த அம்பாசமுத்திரம் தீயணைப்புபடை வீரர்கள் நிலைய அலுவலர் சி. ராஜூ தலைமையில் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் லாரியில் இருந்து 300 கட்டு வைக்கோல் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்தினால் அம்பை, தென்காசி பிரதான சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அம்பாசமுத்திரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.