தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அறந்தாங்கியில் கத்தி முனையில்  5 பவுன் நகை ரூ.10 ஆயிரம் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கியில் திங்கள் கிழமை நள்ளிரவில் 5 பவுன் தங்க நகை ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கத்தியை காட்டி

News image
Updated On :29 அக்டோபர் 2013, 1:36 pm

கவியழகன்

புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கியில் திங்கள் கிழமை நள்ளிரவில் 5 பவுன் தங்க நகை ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கத்தியை காட்டி மர்ம நபர் திருடிச் சென்றார்.

அறந்தாங்கி கணபதி நகரை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் இவர் லாரியில் விறகு ஏற்றி விற்பனை செய்யும் வியாபாரியாக உள்ளார். இவர் தனது குழந்தைக்கு உடல்நலக்குறைவு காரணமாக மனைவியுடன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்துள்ளார்.

வீட்டில் அவரது மகன் ரித்திஸ்ஷா(5) மற்றும் இவரது மாமியார் முத்தமிழ் செல்வி ஆகியோர் இருந்துள்ளனர் நள்ளிரவு 1 மணிக்கு  மாடியில் உள்ள வீட்டின் கதவின் பூட்டை உடைத்து முகத்தில் கருப்பு துணி கட்டியிருந்த மர்ம நபர் புகுந்து குழந்தையை கத்திமுனையில் நிற்க வைத்து வீட்டில் இருந்த செயின் மற்றும் வளையல் உள்ளிட்ட 5 பவுன் தங்க நகை மற்றும் வீட்டிலிருந்து ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு தப்பிச்சென்று விட்டார்.

இது குறித்து அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கே.பாலாஜி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.