மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூத்துக்குடி வஉசி துறைமுகம் ஒரே நாளில் அதிக சரக்குகளை கையாண்டு புதிய சாதனை

தூத்துக்குடி வஉசி துறைமுகம் ஒரே நாளில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 610 டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.இதுகுறித்து துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் சு.

News image
Updated On :4 செப்டம்பர் 2013, 9:25 am

இன்பராஜ்

தூத்துக்குடி வஉசி துறைமுகம் ஒரே நாளில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 610 டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.இதுகுறித்து துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் சு. நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடந்த 31-ம் தேதி 1,39,610 டன் சரக்குகளை ஒரே நாளில் கையாண்டு புதிய சாதனையை படைத்தது.  இதற்கு முன்பு 11.7.2009 அன்று ஒரே நாளில் 1,17,641 டன் சரக்குகள் கையாளப்பட்டதுதான் இதுவரை சாதனையாக இருந்தது.அதிக அளவில் தொழிலக மற்றும் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு உண்டான கரி இறக்குமதி செய்யப்பட்டதால் இந்த சாதனை படைக்க முடிந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 45,691  சரக்கு பெட்டகங்கள் கையாண்டு  இதற்கு முன் 2008-ம் ஆண்டில் ஒரே மாதம் கையாண்ட அதிகபட்ச சரக்கு பெட்டகங்களான 45,126  சரக்கு பெட்டகங்களை விட அதிகமாக கையாண்டு வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சாதனை புரிந்துள்ளது.

இந்த சாதனை படைக்க உறுதுணையாக இருந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், துறைமுகசபை உறுப்பினர்கள், துறைமுக துறை தலைவர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், சரக்குப்பெட்டகங்களை கையாளும் தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து கொள்கிறேன்.இந்த சாதனையை தொடந்து, மத்திய கப்பல்துறை அமைச்சகம் நிர்ணயித்த 2013-14 ஆம் நிதியாண்டுக்கான குறியீடு 30 மில்லியன் டன் சரக்கையும், 5.04 லட்சம்  சரக்கு பெட்டகங்களையும் கையாண்டு, சாதனை புரிய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.