இதுகுறித்து காரைக்கால் மீன் வளத்துறை இணை இயக்குநர் என்.இளையபெருமாள் வியாழக்கிழமை கூறும்போது, காரைக்கால் மாவட்டத்திலிருந்து ஜூலை 30-ம் தேதியும், 31-ம் தேதியும் இரு பிரிவாக 29 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கடலில் பாயிண்ட்பெட்ரோ என்ற இடத்தில் கைது செய்யப்பட்ட, காரைக்கால் மேடு கிராமத்தை சேர்ந்த வீரகுமார், மோகன், கதிரவன், குட்டிவீரன், முரளி, கந்தசாமி, செல்வமணி, கலைமணி ஆகியோரும், கிளிஞ்சல்மேடு கிராமத்தை சேர்ந்த மதிவாணன், கனகசபை, கருக்களாச்சேரி கிராமத்தை சேர்ந்த ராமதாஸ், ராஜா, செல்வநாதன், மதுரைவீரன் ஆகிóய 14 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. இவர்கள் வெள்ளிக்கிழமை மண்பம் வருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.