சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

திருநெல்வேலியில் பாரதியார் நினைவு தினம்

பாரதியார் உலக பொதுச் சேவை மன்றம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாரதியார் சிலைக்கு அமைப்பின் தலைவர் அ. மரியசூசை தலைமையில் மன்றத்தினர் மாலை அணிவித்தனர். அமைப்பின்

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 8:37 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலியில் மகாகவி பாரதியாரின் 92 வது நினைவு தினத்தையொட்டி புதன்கிழமை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

பாரதியார் உலக பொதுச் சேவை மன்றம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாரதியார் சிலைக்கு அமைப்பின் தலைவர் அ. மரியசூசை தலைமையில் மன்றத்தினர் மாலை அணிவித்தனர். அமைப்பின் செயலர் கவிஞர் கோ. கணபதிசுப்பிரமணியன், மக்கள் தொடர்பு அலுவலர் தெ.கு. ராமச்சந்திரன், மாநில பெட்காட் துணைத் தலைவர் பி. வெங்கடாசலம், ஒருங்கிணைப்பாளர் நடராஜன், நஞ்சுண்டேஸ்வரன், கதிர்வேல், கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து சாதி, மத, இன, மொழி பாகுபாடின்றி மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். பாரதியாரின் கனவை நனவாக்க பாடுபட வேண்டும் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.