மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தொழிலாளி அடித்துக் கொலை: மைத்துனர் கைது

தூத்துக்குடி அம்பேத்கர்நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் (45). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமி. இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுப்புலட்சுமியின் தம்பி மாரிமுத்து (38)

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 12:40 pm

இன்பராஜ்

தூத்துக்குடியில் செல்போன் காணாமல் போன தகராறில் கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மைத்துனர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி அம்பேத்கர்நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் (45). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமி. இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுப்புலட்சுமியின் தம்பி மாரிமுத்து (38) அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர், தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த சில  நாள்களுக்கு முன்பு பால்ராஜ் வீட்டில் இருந்த செல்போன் திருட்டு போனதாகக் கூறப்படுகிறது.  அந்த செல்போனை மாரிமுத்து எடுத்ததாகக் பால்ராஜ் கூறி வந்தாராம். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

வழக்கம்போல, பால்ராஜ் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது செல்போன் திருட்டு தொடர்பாக மாரிமுத்துவை சம்பந்தப்படுத்தி பேசினாராம். அப்போது, ஏற்பட்ட தகாராறில் அங்கிருந்த உருட்டு கட்டையால் பால்ராஜை மாரிமுத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த பால்ராஜ் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.இந்த கொலை சம்பவம் குறித்து பால்ராஜின் மனைவி சுப்புலட்சுமி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.போலீஸார் வழக்குப் பதிந்து பால்ராஜை கொலை செய்ததாக மாரிமுத்துவை கைது செய்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.