டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இரவில் தொடரும் மின்தடையை கண்டித்து ஆரம்பாக்கத்தில் சாலை மறியல்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் கடந்த இரு வாரங்களாக இரவு நேரத்தில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதை கண்டித்து

News image
Updated On :12 செப்டம்பர் 2013, 9:32 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் கடந்த இரு வாரங்களாக இரவு நேரத்தில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதை கண்டித்து அப்பகுதி வியாபாரிகள் சங்கத்தினர், பொதுமக்கள் வியாழனன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் இரண்டாவது பெரிய ஊராட்சியான ஆரம்பாக்கத்தில் சுமார் 15ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். அத்தோடு ஆரம்பாக்கத்தை சுற்றியுள்ள பூவலை, தோக்கமூர், எகுமதுரை உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்தவர்களும் அவர்களுடைய அன்றாட தேவைகளுக்காக வந்து கூடும் இடமாக ஆரம்பாக்கம் உள்ளது.

இந்நிலையில் கடந்த 2 வாரமாக தொடர்ந்து ஆரம்பாக்கம் பகுதியில் இரவு நேரத்தில் மின் தடை ஏறபட்டால் மறுநாள் காலை தான் மீண்டும் மின்சாரம் வரும். மின்வாரிய அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டால் சிப்காட்டில் இருந்து மாதர்பாக்கம் வழியே ஆரம்பாக்கத்திற்கு வரும் 32 கிலோ வாட் மின்கம்பிகளில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மினதடை ஏற்பட்டதாக கூறி வந்தார்கள்.

தொடர்ந்த இந்த மின்தடையால் ஆரம்பாக்கம் பகுதி மட்டுமல்லாது பூவலை,தோக்கமூர், எகுதுமரை, ஏடூர், கண்ணம்பாக்கம், பல்லவாடா உட்பட ஊராட்சிகளை சேர்ந்த 50 கிராமங்களும் இந்த மின்தடையால் இரவு முழுக்க பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த மின்தடையால் ஆரம்பாக்கத்தில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள், படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறி வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் சுமார் 500 வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையம் எதிரே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மழையில் நனைந்தபடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட், கும்மிடிப்பூண்டி தாசில்தார் அப்துல் ரஹீம் ஆகியோர் சமாதானம் பேசிய போது மின்வாரியத் துறை அதிகாரிகள் வந்தால் மட்டுமே சமாதானத்திற்கு வருவோம் என்று சொன்னதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்வதாக கூறிய போலீஸார் 60 பேரை தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

தொடர்ந்து அங்கு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கோட்ட பொறியாளர் நவநீதகிருஷ்ணன், உதவி கோட்ட பொறியாளர் பாண்டியன், செயற்பொறியாளர்கள் சந்திரன், ஜெயபால் ஆகியோர் வட்டாட்சியர் அப்துல் ரஹீம், இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தையின் போது இரவு நேரத்தில் தொடர்ந்து வரும் மின்வெட்டால் வியாபாரிகளும், பொதுமக்களும் படும் இடரை குறித்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகளான கோபால், காமராஜ் உள்ளிட்டோர் விளக்கினார்கள். அப்போது பதிலளித்த மின்வாரிய துறை கோட்ட பொறியாளர் நவநீதகிருஷ்ணன் தெரிவிக்கையில் சில நேரங்களில் மழை காற்று காரணமாக மின் தடை நேருவதுண்டு, கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கும்மிடிப்பூண்டியில் இருந்து மாதர்பாக்கத்திற்கு வரும் 32 கிலோ வாட் மின்கம்பியில் சில விஷமிகளின் செயலின் காரணாக இந்த மின்தடை ஏற்படுவதாக சந்தேகிக்கிறோம், எனவே இது குறித்து காவல்துறையினரின் உதவியோடு இது போன்ற மின்தடை ஏற்படாமலிருக்கு நடவடிக்கை எடுப்பதோடு, ஆரம்பாக்கத்தை தொடரும் மின்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக ஆரம்பாக்கத்திற்கென துணை மின்நிலையம் தனியாக அமைத்து 3 மாதத்திற்குள் பிரச்சனை சரிசெய்யப்படும் என்றனர்.

இந்த திடீர் சாலை மறியல் காரணமாக சுமார் 45 நிமிடம் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.