சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நெல்லை அருகே ஆசிட் ஊற்றப்பட்டதால் எரிந்த தீயினால் பாதிப்பு

திருநெல்வேலி அருகே பறிமுதல் செய்யப்பட்ட ஆசிட்டை சாலையோரம் ஊற்றியதால் சனிக்கிழமை அங்கு தீ பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்து.

News image
Updated On :15 செப்டம்பர் 2013, 4:48 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி அருகே பறிமுதல் செய்யப்பட்ட ஆசிட்டை சாலையோரம் ஊற்றியதால் சனிக்கிழமை அங்கு தீ பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்து.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மாதம் ஒரு பெண் மீது ஆசிட் ஊற்றி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பல்வேறு கடைகளில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட ஆசிட் பறிமுதல் செய்யப்பட்டது.

பல்வேறு பகுதியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த ஆசி்ட்டை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து  பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 4,000 லிட்டர் ஆசிட்டை போலீஸார் திருநெல்வேலி நாகர்கோவில் நெடுஞ்சாலையில் ரெட்டியார்பட்டி மலை அருகே சாலையோரத்தில் சனிக்கிழமை கொட்டியாக கூறப்படுகிறது.

அவ்வாறு கொட்டப்பட்ட ஆசிட்டில் இருந்து தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதி புகைமண்டலமாக காட்சியளித்து. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். தீயை பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.