ஜி.கே.மணி உள்பட பாமகவினர் 100 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே கீழ்பையூரில் பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி பங்கேற்று


அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி உள்பட 100 பேர் மீது கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே கீழ்பையூரில் பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி பங்கேற்று பேசினார். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்திற்கு, காவல்துறையிடமிருந்து உரிய அனுமதி ஏதும் பெறவில்லை எனக்கூறி பையூர் கிராம நிர்வாக அலுவலர் மதியழகன் காவேரிப்பட்டணம் போலீஸாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீஸார், அனுமதியின்றி கூட்டம் கூடுதல் மற்றும் கூட்டத்தை சேர்த்து கொடியேற்றியதாகக் கூறி இரு பிரிவுகளின் கீழ் ஜி.கே.மணி மற்றும் முன்னாள் எம்எல்ஏ த.அ.மேகநாதன், மாநில துணை பொதுச்செயலர் மாதேஸ்வரன், மாநிலத் துணைத் தலைவர் கடலூர் சண்முகம், வன்னியர் சங்க மாநிலத் துணைத்தலைவர் புல்லட் கணேசன் உள்பட 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...