சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி நெல்லை அருகே கிராம மக்கள் திடீர் மறியல்

புதன்கிழமை கொழுமடை பஸ் நிறுத்தம் அருகே பெண்கள் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் திரண்டனர். உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்த கிராம மக்கல் அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அஙஅகு சேரன்மகாதேவி டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

News image
Updated On :18 செப்டம்பர் 2013, 7:18 am

ஷேக் அப்துல்காதர்

மதுக்கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலி அருகே கிராம மக்கள் திடீரென சாலையில் மறியலில் புதன்கிழமை ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி சேரன்மகாதேவி பிரதான சாலையில் மேலச்செவல் அருகே கொழுமடை பஸ் நிறுத்தத்தில் 2 வாரங்களுக்கு முன் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த கடையினால் கொழுமடை பகுதி மக்களுக்கு அச்சம் இருப்பதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

அங்கிருந்து டாஸ்மாக் கடை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்தனர். இருப்பினும் அங்கிருந்து கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

புதன்கிழமை கொழுமடை பஸ் நிறுத்தம் அருகே பெண்கள் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் திரண்டனர். உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்த கிராம மக்கல் அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அஙஅகு சேரன்மகாதேவி டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.